Monday, March 11, 2013

மருத்துவம- தடுப்பூசி - பாகம் 1

மருத்துவம் 
தடுப்பூசி - பாகம் 1 
**************************

நம் உடலில் இயற்கையாக உள்ள எதிர்ப்பு சக்தி பற்றிய சிறு குறிப்பு
********************************************************** 
Bacteria, Virus போன்ற கிருமிகள் நம் உடலை தாக்கும் பொழுது, அவை உடலுக்குள் புகுந்து, உடலில் இனப்பெருக்கம் (multiplication) செய்துவிடும். கிருமிகள் உடலுக்குள் புகுதலை infection என்று அழைக்கிறோம். இந்த கிருமிகள் நம் உடலுக்கு நோயை (Disease,illness) உண்டாக்கும்.இந்த கிருமிகளுக்கு எதிராக, நம் உடலின் எதிர்ப்பு சக்தி, பல வழிகளில் போராடும்.

நம் உடலின் எதிர்ப்பு சக்தி எவ்வாறு கிருமிகளுக்கு எதிராக போராடும் ?
நம் உடலில் , நோய்களுக்கு எதிராக போராட B-lymphocytes, T-lymphocytes மற்றும் Macrophages என்ற வெள்ளை அணுக்கள் இருக்கின்றது . ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பணி.
உதாரணம் : macrophageன் பணி கிருமிகளை சாப்பிட்டு (முழுங்கி ) செரித்துவிடுதல்.

முதன் முதல் நம் உடலில் கிருமி நுழையும் பொழுது உடலின் எதிர்ப்பு சக்தி , அந்த கிருமியை அழித்து, infectionஐ நீக்க பல நாட்கள் ஆகலாம். நம் எதிர்ப்பு சக்தி, இந்த கிருமியை பற்றியும் அதன் குணாதிசியத்தை பற்றியும் அதை எப்படி அழிக்க வேண்டும் என்பது பற்றியும் நினைவில்(memory) வைத்திருக்கும். அடுத்த முறை அதே கிருமி தாக்கும் பொழுது, கிருமியை உடனே அழித்து உடலை காக்கும்.

________________________________________________________

தடுப்பூசி(vaccine) எவ்வாறு செயல்படுகிறது ?
தடுப்பூசி நம் உடலில் (குறிப்பிட்ட) நோய் எதிர்ப்பு சக்தியை (immunity ) உண்டாக்கும்.

தடுப்பூசி எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் ?
தடுப்பூசியில், நோய் தாக்கும் அதே கிருமிகள் இருக்கிறது.

"என்னது தடுப்பூசியில் கிருமிகளா?"னு பயப்படாதீர்கள்.
தடுப்பூசியில் உள்ள கிருமிகள் கொல்லப்பட்டிருக்கும் அல்லது அந்த கிருமிகள் செயற்கை முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும். அதனால் தடுப்பூசியை , நம் உடலில் செலுத்தியவுடன், 'கிருமியினால் ஏற்படும் infection'ஐ போன்றே தடுப்பூசியும் பாவனை (imitate ) செய்யும். ஆனால் நோயை உண்டாக்காது.
(உதாரணம் : ஒரு கண்ணாடியில் கத்தியின் பிம்பம் தெரிகிறது . பிம்பத்தினால் நமக்கு ஆபத்து இல்லையே. )

தடுப்பூசி செய்யும் இந்த பாவனையால் (நோய் போன்றே imitate செய்தல்) நமக்கு நோய் உண்டாகாது. ஆனால் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் T-Lymphocyteகளையும் , எதிர்ப்பு சக்தியை தரும் antibodiesகளை உண்டாக்கும் B-Lymphocyteகளையும் தூண்டிவிடும்.
(கண்ணாடியில் தெரியும் கத்தியின் பிம்பத்தை பார்த்து, நாம் பயந்து கத்துவது போல், நம் உடலும், ஆபத்தில்லாத தடுப்பூசியை பார்த்து, ஏமாந்து போய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும்.)

கொஞ்ச நேரத்தில் அந்த நாடகம் (நோய் கிருமி தாக்கியது போன்ற பிம்பம் ) முடிவுக்கு வந்துவிடும். ஆனால் T-Lymphocyteகள் இந்த கிருமி பற்றி நியாபகத்தில் வைத்திருந்து, அடுத்த முறை,உண்மையான கிருமி உடலை தாக்கினால், இவை எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி கிருமியை கொன்று உடலை காக்கும் .

_______________________________________________________

"இயற்கையாக நோய் வந்தால், நம் உடல் , எதிர்ப்பு சக்தியை தானாகவே உண்டாக்குகிறது"னு சொல்றிங்களே, அப்புறம் எதற்கு இந்த தடுப்பூசி ? நான் நோயை இயற்கையாகவே பெற்றுக்கொள்கிறேன். எனக்கு தடுப்பூசி தேவையில்லை தானே ?னு சிலருக்கு கேள்வி எழலாம்.

விடை : இயற்கையாக நோய் தாக்கினாலும் எதிர்ப்பு சக்தி உண்டாகும் என்பது சரி தான். ஆனால் அப்படி இயற்கையாக வரும் நோய்களில் பல ஆபத்தான விளைவுகள் (complications) வரலாம்.நோய் தாக்கிய சிலர் இறந்தும்விடலாம். அதனால் நோய் வராமல் தடுக்கவே தடுப்பூசி போடப்படுகிறது.

ஆதாரம் : Centre for Disease Control and Prevention, Atlanta, USA
http://www.cdc.gov/vaccines/hcp/patient-ed/conversations/downloads/vacsafe-understand-color-office.pdf

தடுப்பூசிகளின் வகைகள் என்ன? இந்திய அரசு இலவசமாக அளிக்கும் தடுப்பூசிகள் என்ன? தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் என்ன ?- போன்ற கேள்விகளுக்கு விடை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்.

அன்புடன்,
மருத்துவர். கார்த்திக் பாலாஜி.

Photo: மருத்துவம் 

 (மருத்துவ பகுதியை தமிழில் எளிதாக விளக்க முடிந்த வரை முயற்சித்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்)
(மருத்துவ பகுதியை தமிழில் எளிதாக விளக்க முடிந்த வரை முயற்சித்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்)

மருந்து மட்டுமே மருத்துவம் இல்லை

மருந்து மட்டுமே மருத்துவம் இல்லை 
*******************************
தினமும் காலையில், எய்ம்ஸ்ல இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்னு ஒரு மருத்துவ குழு, வாகனத்துல கிளம்புவோம். 45 நிமிஷம் பயணிச்சு, ஒரு காலனிக்கு போய் நோயாளிகளுக்கு இலவசமா மருத்துவம் பார்ப்போம் . மருந்துகளும் இலவசமா கொடுப்போம் . மதியம் எய்ம்ஸ்க்கு திரும்ப வந்திடுவோம். 

நேற்றும் அப்படித்தான். 
தெற்கு டெல்லியில் இருக்கும் அம்பேத்கர் நகர் காலனிக்கு போனோம். பல மாநிலத்துல இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும் resettlement colony அது.
10 மணி வாக்குல 23 வயசு பெண் தலைவலினு வந்திருந்தார். அவர் கூட யாரும் இல்லை. பரிசோதிச்சுட்டு மருந்து எழுதியிருக்கிறார் ஒரு மருத்துவர். ஆனா 5 நிமிஷத்துல அந்த பெண் தலைவலி தாங்க முடியாம, மரத்தடியில படுத்து அழ ஆரம்பிச்சுட்டார்.

"ஜூரம் இருந்துதா ? வாந்தி எடுத்தீங்களா?"னு நான் கேட்டதுக்கு மட்டும் 'ஆமாம்'னு தலை அசைத்தவர், வேற எதுக்கும் பதில் சொல்லல . தலைவலி மட்டுமே தொந்தரவுனு வந்தவர், தலையில கைய வெச்சுக்கிட்டு அழு ஆரம்பிச்சதை பார்த்த அனைவருக்கும் பதற்றம். கண்ணை திறக்கவில்லை. என்ன நோய்னு என்னால சரியா கண்டுபிடிக்க முடியல.

'மைக்ரைனா இருக்கும் . ஆனா ஒரு வேள மூலை காய்ச்சலா இருக்குமோ ?' னு சந்தேகிச்சு உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு ரெஃபர் செய்தேன். எங்க வாகனத்துல பரிசோதிக்க வசதியில்லை.
பணியாளர்கள் அவரோட செல்ஃபோனில் இருந்த நம்பருக்கு பேசி , வீட்ல இருந்தவங்கள வரவழைச்சு அனுப்பி வெச்சோம். எனக்கு ஒரே பயம்.

சீனியர் மேடம் (என்னை விட 6,7 வயசு பெரிய மருத்துவர்)," பயப்படாத பாலாஜி. ஒன்னும் ஆகாது.எனக்கு இது சீரியஸ் நோயா தோணல. அந்த பெண்ணுக்கு ஏதோ டென்ஷன் இருக்கு . நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் விசாரிப்போம்"னு சொன்னார்.

இன்னைக்கு காலை அந்த காலனிக்கு போனோம் .
அந்த பெண்ணின் விலாசம் எங்ககிட்ட இருந்தது. நானும் மேடமும் அந்த வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தோம்.
ஒரே துர்நாற்றம். மோசமான சுகாதார வசதிகள் . குறுகிய சந்துகள். சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவுக்கு நெருக்கமான வீடுகள். 1.5 கி.மீ தூரம் நடந்து அந்த வீட்டுக்கு போனோம்….

'அந்த பெண்ணுக்கு ஏதாவது ஆகிருந்தா?' - எங்களுக்கு உள்ளுக்குள்ள ஒரே பயம். ஆனா அந்த பெண் சாதாரணமா வீட்டு வேலை செஞ்சுகிட்டு இருந்தார். எங்களுக்கு ஆச்சர்யம். ஆனாலும் நிம்மதி.
பெண் (நோயாளி) : நேத்து நீங்க கொடுத்த வலி மாத்திரைய சாப்பிட்டதும் கொஞ்ச நேரத்துல தலைவலி சரியாகிடுச்சு.

நானும் மேடமும் முகத்த முகத்த பாத்து சிரிச்சிகிட்டோம். அவரை தனியா விசாரிச்சோம். நாங்க நினைச்ச மாதிரி, சீரியஸான மருத்துவ பிரச்சனை ஏதும் இருக்குறதா தோணல. மைக்ரைனாகத்தான் இருக்கணும். Tension headacheஆக கூட இருக்கலாம். பயப்பட ஏதும் இல்லை. டென்ஷனை குறைத்தால் சரியாகிடும்.தலைவலி மாத்திரையே போதும். ஆனா வேற ஏதோ பிரச்சனை இருக்குனு எங்களுக்கு பட்டுச்சு.

மெல்ல மெல்ல பெண் (நோயாளி) பேச ஆரம்பிச்சார்.
நான் அங்க இருந்தா அவருக்கு சங்கடமா இருக்கும்னு, அவர் பெற்றோரை பார்த்து பேச, அடுத்த அறைக்கு போனேன்.
அந்த அறையில அப்பா அம்மா சோகமா இருந்தாங்க.

50 வயசு அப்பா. மேஸ்திரி வேலை செய்பவர். 30 வருடம் பீடி பிடிச்சதால நுரையீரல் பாதிப்பாகி இருமலுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். சில வருஷம் முன் காச நோய் தாக்கி குணமடைந்தவர். அம்மாவுக்கும் இருமல் .
ரெண்டு பேரையும் பரிசோதிச்சு மருந்து எழுதுனேன்.
ஆனா இதெல்லாம் அவங்களுக்கு பிரச்சனையாவே இல்லை. வேற ஏதோ பிரச்சனை இருக்குனு மனசுக்கு பட்டுச்சு.

நான் : வீட்டுல பிரச்சனை இருக்குற மாதிரி தோணுது. ஏதும் குடும்ப பிரச்சனை இருக்கா ?
அப்பா அம்மா அமைதியா இருந்தாங்க.

நான் : பெண்ணுக்கு திருமணம் ஆகலைனு வருத்தமா?
அப்பா : 'ஆமாம்'னு தலையசைத்தார்.

நான் : ஏன் ? பணம் ஏதும் பிரச்சனையா ?
அப்பா : பண பிரச்சனை இல்லை. மணமகன் கிடைக்கல .

நான் : கவலபடாதீங்க. கடவுள்கிட்ட விட்டுடுங்க.சீக்கிரம் கல்யாணம் நடக்கும் .
சமாதானப்படுத்திட்டு, மேடமும் அந்த பெண்ணும் மேடமும் இருந்த அறைக்கு வந்தேன்.

எங்களுக்கு டீ எடுத்துக் கொண்டு வந்த பெண் , ஒரு ஃபோட்டோவ காட்டி,"அவ தான்"னு காட்டினார். இவ்வுளவு நேரம் வீட்டுல இருந்த நான் , இது வரை அந்த ஃபோட்டோவ கவனிக்கவேயில்லை.

நான் மேடம்கிட்ட ஆங்கிலத்துல பேச ஆரம்பிச்சேன்.
நான் : என்ன மேடம் ஆச்சு ?
மேடம் : ஃபோட்டோவுல இருக்குறது இவங்க தங்கை. போன வருஷம் இறந்துட்டாங்க.
நான் : ஐய்யோ. ரொம்ப சின்ன வயசா இருக்கே .எப்படி ?

பெண் (ஆங்கிலம் தெரியாட்டியும், நான் பேசுறத புரிஞ்சுகிட்டு): மாடியில இருந்து விழுந்துட்டா.
நான் : ?

பெண் : சாகுறப்போ அவளுக்கு 16 வயசு . பத்தாவது படிச்சிகிட்டு இருந்தா.
பெண் அழ ஆரம்பிச்சார்.
மேடம் : கவலபடாதமா. எல்லாருக்கும் மரணம் வரும்.சிலருக்கு லேட்டா வரும்.சிலருக்கு சீக்கிரம் வரும். வருத்தப்படாதமா.

மேடம் நிறைய சமாதானம் சொன்னாங்க.
(எங்களிடம் மன நல மருத்துவர் இல்லை) நாளைக்கு திரும்ப எங்க வாகனத்துக்கு வாங்கனு சொல்லிட்டு கிளம்பினோம்.
எனக்கும் மேடத்துக்கும் வருத்தம். பேசிகிட்டே நடந்தோம்.

நான் : எப்படி மேடம் அவங்களால மறக்க முடியும் . விட்டுல பொண்ணு இறந்திருக்கு. இறந்த பொண்ணோட 2 ஃபோட்டோவ வீட்டுல வெச்சுருக்காங்க. அத பாக்க பாக்க நினப்பு இருக்குமே.
மேடம் : ஆமாம் பாலாஜி . இதான் பிரச்சனை. அதுனால தான் பொண்ணுக்கு கல்யாணம் ஆகல.

மேடம் : பொண்ணுங்க அக்கா/ தங்கச்சிகிட்ட தான் நெருக்கமா இருப்பாங்க.எல்லாத்தையும் அவங்ககிட்ட பேசி பகிர்ந்துபாங்க. தங்கச்சி இறந்ததுல தான் இந்த பெண்ணுக்கு இவ்ளோ வருத்தம்.

நான் : பசங்க நாங்க அண்ணன் தம்பிகிட்ட சண்ட தான் போடுவோம் .
மேடம் : பொண்ணுங்க இயற்கை அப்படி . இப்போ இந்த பொண்ணு, அம்மா அப்பாவ பாத்துக்குணும்னு , கல்யாணம் வேணாம்னு சொல்லிகிட்டு இருக்கு.

நான் : கல்யாணாம் ஆகாததுக்கு இது தான் காரணமா ?
மேடம் : இன்னும் நிறைய பிரச்சனை. நல்ல மணமகன் கிடைக்கணும்.நல்ல வேலையுள்ள மணமகன் நிறைய எதிர்பார்ப்பார். அதுக்கு நிறைய செலவளிக்கணும்.

நான் :தமிழ் நாட்டுல ஜாதக பொருத்தம் வேற பிரச்சனை .செவ்வாய் தோஷம்னு பல பொண்ணுங்களுக்கு கல்யாணம் தள்ளிப்போகும் .
மேடம் : இங்கேயும் (வட இந்தியாவிலும்) அது இருக்கு.

பேசிக்கிட்டே வாகனத்துக்கு வந்து சேர்ந்தோம். நோயாளிகள பார்த்துட்டு கிளம்பினோம்.

நேத்து நோயாளினு நாங்க நினைச்சவருக்கு என்ன பிரச்சனைனு புரிஞ்சுது. ஆனா அவர் ''நோய்க்கு'' எங்க கிட்ட மாத்திரை தான் இல்லை. யார்கிட்டயும் இருக்காது. மறதி தான் மருந்தா இருக்கும். காலம் துக்கத்த மறக்கடிச்சுடும்.
காய்ச்சல் இருமலுக்கு வித விதமா மருந்து இருக்குற மாதிரி, நம்ம பிரச்சனைகள தீர்க்குறதுக்கும், இழப்புகள மறக்குறதுக்கும் மாத்திரை மருந்து இருந்தா நல்லா இருக்குமே.

நம்மள படைக்குறவன் அதிகமா வேலை செய்கிறான். மக்கள் தொகை 600 கோடிய தாண்டிடுச்சு.
நம்மள அழிக்குறவனும் நாள் தவறாம வேலை செய்றான். என்ன ஒன்னு, தப்பு தப்பா அழிக்குறான்.
ஆனா காக்க வேண்டியவன் என்ன செய்றான் ? நிம்மதியா தூங்குறான் போல.

பாலாஜி

Photo: மருந்து மட்டுமே மருத்துவம் இல்லை 

மருத்துவ பகுதி - ரத்தக்கொதிப்பு

மருத்துவ பகுதி- 5 
**************
கேள்வி : ரத்தக்கொதிப்பு (hypertension) உள்ளவர்கள், 'உணவில் உப்பை குறைக்க வேண்டும்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்களே. உணவில் அதிகப்படியாக எவ்வுளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம் ?

பதில் : 24 மணி நேரத்தில், ஒருவர் சாப்பிடும் மொத்த உணவில், அதிகப்படியாக 6 கிராம் உப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்ட அளவு. ( 6 grams of sodium chloride/day ) 

Reference : The Seventh Report of the Joint National Committee on Prevention, Detection, Evaluation, and Treatment of High Blood Pressure (JNC 7) by National Heart, Lung, and Blood Institute.
http://www.nhlbi.nih.gov/guidelines/hypertension/phycard.pdf

இந்தியா- பட்ஜெட் 2013 - சுகாதாரத்துறை

இந்தியா- பட்ஜெட் 2013 - சுகாதாரத்துறை 
****************************************

சுதந்திர இந்தியாவின் 65வது வருடாந்திர பட்ஜெட் சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
'2014ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்' என்ற காரணத்தினால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் .
எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினாரா ?
இந்த பட்ஜெட், சுகாதாரத்துறையை எந்த வகையில் பாதிக்கும் ?

# " சுகாதாரத்துறைக்கு இந்த ஆண்டு ரூ.37,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 28 % அதிகம் "
இது போதுமா ? போதாதா ? மகிழ்ச்சி தரக்கூடியதா ?
ஒரு நாட்டில் மக்கள் உயிருக்கு, அரசு எவ்வுளாவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை, அரசு தனது மொத்த வருமானத்தில் சுகாதாரத்துறைக்கு எவ்வுளவு சதவிகிதம் ஒதுக்கியுள்ளது ( % of GDP spent on health ) என்பதை வைத்து சொல்ல முடியும். இந்தியாவில் தற்பொழுது இது வெறும் 1 % .

அதாவது இந்தியாவின் மொத்த வருமானத்தில் 1 % மட்டுமே மக்களின் உடல் நலத்திற்கு ஒதுக்கியுள்ளது நம் அரசு . ஆனால் 'இது போதாது, இது 2.5 சதவிதமாக இருக்க வேண்டும்' என்று திட்டக் கமிஷனே கூறுகிறது.
வளர்ந்த நாடுகளான ஃப்ரான்ஸில் 11 % அமெரிக்காவில் 15 % இங்கிலாந்தில் 8.5 % சுகாதாரத்துறைக்கு ஒதுக்கி உள்ளனர். நைஜீரிய நாடு கூட நம்மை விட அதிக நிதியை சுகாதாரத்திற்கு ஒதுக்குகிறது. இந்தியாவில் மட்டும் இவ்வுளவு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் ? நம்ம நாட்டு மக்களின் உயிர், மற்ற நாட்டு மக்களைக் காட்டிலும், கொஞ்சம் cheap தானே.

பாதுகாப்புத்துறைக்கு (defence) இந்த ஆண்டு ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது (சென்ற ஆண்டு ரூ.193,407 கோடி) அதாவது மக்களின் சுகாதாரத்துறையைவிட பாதுகாப்புத்துறைக்கு 5 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பும் முக்கியம் தானே என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி :
ராணுவத்திற்கு செலவு செய்யப்படும் பட்ஜெட் பற்றி SIPRI அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் 1 % GDP செலவு செய்கிறது. ஜெர்மனி 1.3 %, ஃப்ரான்ஸ் 2.3 % தான் செலவு செய்கிறது.
ஆனால் இந்தியாவோ இவற்றை எல்லாம் விட அதிகளவு ராணுவத்திற்கு செலவு செய்கிறது - 2.6 %
சீனாவே 2 % தான் செலவு செய்கிறது.
காலம் காலமாக நம் நாட்டில் 'aam aadmi' (சாமானியர்)ஐ விட 'arms aadmi'க்கு தான் நிறைய முக்கியத்துவம் .

# NRHM (National Rural Health Mission) எனப்படும் தேசிய ஊரக சுகாதார இயக்கம் என்பது கிராமப்புற மக்களின் சுகாதாரத்திறக்காக (குறிப்பாக கர்ப்பவதிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக க்ஷ்) மத்திய அரசால் 2005ல் துவங்கப்பட்ட திட்டம் . மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.21,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற வருடத்தை காட்டிலும் 24 % அதிகம். சந்தோஷமான செய்தி.

நகர்புற ஏழை மக்களுக்கு இது மாதிரியான திட்டம் ஏதும் இல்லாதது நீண்ட நாள் குறையாக இருந்தது . இதனை போக்க National Urban Health Mission (NUHM) துவங்குவதாக சில ஆண்டுகளாக பேசப்பட்டது . தற்பொழுது தான் அதற்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
அப்படியானால் NUHM துவங்கப்படுகிறதா ? அது தான் கிடையாது.
தற்பொழுது NRHM மற்றும் NUHM என்ற இரண்டையும் சேர்த்து National Health Mission (கிராமம் மற்றும் நகர்புறம்) துவங்குகிறார்கள்.
நல்ல விஷயம் தானே. இதில் என்ன பிரச்சனை ?
நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கு.
குழந்தையே பிறக்கவில்லை. அதுக்கு முன்பே பெயர் வைத்துள்ளார்கள்.
முதலில் NUHM துவங்கியிருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் அதனை இன்னொரு திட்டத்தோட இணைத்திருக்க வேண்டும்.

# இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4 கோடி பேர் நோய்வாய்பட்ட காரணத்தினால் ஏழைகளாக்கப்படுகிறார்கள்.
காரணம் ? பெருகி வரும் மருத்துவ செலவு .
உதாரணம் : ஒரு நடுத்தர குடும்பம் . எதிர்பாராத விதமாக குடும்பத் தலைவருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. அவரால் வேலைக்கு செல்ல முடியாது. அவரின் மருத்துவ செலவிற்கு என்ன செய்வது ? அவர் மனைவிக்கு வீட்டு வேலையை தவிர வேறு வேலை தெரியாது. மருத்துவ செலவிற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் வீட்டில் உள்ள நகை பணம் மற்றும் சொத்துகளை அடகு வைக்க/விற்க வேண்டி வரும். கடன் வாங்கியாக வேண்டிய நிலை. அவரின் குடும்பம் வறுமைகோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிடும்.
இதை தடுக்கவே பல நாடுகளில் காப்பீட்டுத்திட்டம் உள்ளது. நோய்வாய்படும் போது மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
இங்கிலாந்தில் எல்லோரும் பயன் பெறும் வகையில் Universal Health Coverage உள்ளது. இந்தியாவில் வசதியானவர்களே இதனை பயன்படுத்துகின்றனர். காரணம் பிரீமியம் கட்ட வேண்டுமே.

சில ஆண்டுகளுக்கு முன், வறுமைக்கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்காக Rashtriya Swasthiya Bima Yojana (RSBY) என்னும் காப்பீட்டு திட்டம் துவங்கப்பட்டது. 3.5 கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன் பெற்றதாக அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு சென்ற ஆண்டு ரூ.18,115 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.20,822 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளாது.
இந்தாண்டு ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவர்கள்,துப்புரவு பணியாளர்கள், சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் , மற்றும் குப்பை பொறுக்குபவர்களும் இத்திட்டத்தில் பயணாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது வரவேற்க வேண்டிய ஒன்று .

# "சிகரெட் உற்பத்தி வரி 18 % அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் விலை உயரும். "
உடலுக்கு தீமை தரும் புகையிலை (சிகரெட்) பழக்கத்தை குறைக்க, வரியை அதிகப்படுத்தி விலையேற்றுவது ஒரு சிறந்த வழி என்று பல நாட்டு ஆராய்ச்சிகள் கூருகின்றன. அதனால் சிகரெட் விலை உயர்வு வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி இது 65 % ஆக இருக்க வேண்டும்.அதே போல் பெறும்பாலான மக்கள் புகைக்கும் பீடியின் விலை உயர்தப்படாதது வருத்தமளிக்கிறது.

# "மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ரூ.4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது"
All India Institute of Medical Sciences எனப்படும் எய்ம்ஸிற்கு (AIIMS) ரூ. 1124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பலருக்கு மகிழ்ச்சியளித்தாலும் எய்ம்ஸ் மாணவரான எனக்கே இதில் உடன் பாடில்லை.
"நாட்டின் தலை சிறந்த மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியது சரி தான். இந்தியாவிற்கு பெருமை தரும் ஆராய்ச்சிகள் பல நிகழும்" என்று கூறுபவர்களுக்கு, ஒரு கேள்வி : " திண்டுக்கல் , கும்பகோணம் ,கடலூர் அரசு மருத்துவமனைகள் முக்கியமில்லையா? அதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க வேண்டாமா ?
கொழுக் மொழுக் குழந்த்தைக்கு மட்டும் லட்டு கொடுத்துவிட்டு, மற்ற நோஞ்சான் குழந்தைகளுக்கு ரொட்டி கூட கொடுக்காமல் தள்ளிவிடுவது நியாயமா ?
மாவட்ட மருத்துவமனைகளை முன்னேற்ற எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லையே . ஒதுக்கீடும் இல்லையே.
ஏன் இந்த ஏற்றத்தாழ்வு ,பாகுபாடு ? எய்ம்ஸ் மட்டும் தான் இந்தியாவா ?

# டெல்லி எய்ம்ஸில் வழங்கப்படும் தலை சிறந்த சிகிச்சை, நாட்டின் பிற பகுதி மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், எய்ம்ஸ் போன்றே 6 புதிய மருத்துவமனைகள் (AIIMS-like institutions) சென்ற ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அதற்கு ரூ.1670 கோடி ஒதுப்பட்டுள்ளது.மகிழ்ச்சி.
ஆனால் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் AIIMS-like institution ஒன்று கூட துவங்கப்படவில்லையே . ஏன் ?
அந்த 6 புதிய மருத்துவமனைகளில் ஒன்று கூட தென்னிந்தியாவில் இல்லையே ஏன் ?
ஆயிரம் காரணம் சொன்னாலும், இதைக் கூட நமக்கு பெற்றுத்தர முடியாதவர் தான் நம்ம ஊரைச் சேர்ந்த சுகாதாரத்துறை இணையமைச்சர். (நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் . அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். )

# முதியவர்களின் ஆரோக்கியத்திற்காக "national programme for the healthcare of the elderly " என்னும் திட்டம் துவங்கப்படவுள்ளது. நாட்டில் மொத்தம் 13 கோடி முதியோர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்தி தான்.
ஆனால் இதற்காக வெறும் 150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நாட்டின் குறிப்பிட்ட 100 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் . ஆக ஒரு சென்டருக்கு 1.5 கோடி மட்டும் .போதாது தான். ஆனால் இதுவே துவக்கம். வரவேற்கப்பட வேண்டிய திட்டம் .

# Integrated Child Development Scheme (icds) திட்டத்திற்கு ரூ.17,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
அங்கன்வாடியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக உணவு வழங்குவார்களே, அந்த திட்டம் தான் இது . இத்திட்டத்திற்கு சென்ற வருடத்தில் ஒதுக்கப்பட்டதை (ரூ.15,850 crore) விட இந்த வருடம் 11% அதிகம் . வசதியில்லாத குழந்தைங்களுக்கு சோறு போடுற இந்த உன்னத திட்டத்தை பல நாடுகள் பாராட்டுனாங்க.
ஆனா நடந்தது என்ன ?
எல்லா முதலையும் சாப்பிட்டது போக குழந்தைகளுக்கு எதுவும் மிஞ்சல. இந்த திட்டத்துல இருக்குற பெரிய குறையே ஊழல் தான். அதை சரி செய்யாதவரை, எவ்வுளவு பணம் ஒதுக்குனாலும் அது ஆற்றில் கொட்டிய வெல்லம் போல தான்.

# பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள "Food Security Bill." (உணவு பாதுகாப்பு மசோதா ) இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றுப்படும் என நிதி அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நம்ம ப.சி க்கு பசி கொடுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.ஆனால் என்ன செய்வது.பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை இதை நிறைவேற்றினால் டெல்லி இருக்கும் திசைய பார்த்து ஒரு கும்பிடு போடுவோம்.

# AYUSH எனப்படும் Ayurveda, Yoga, Unani, Sidddha and Homoeopathy போன்ற மருத்துவத்திற்கு ரூ.1,069 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப்படவேண்டிய செய்தி. இந்த AYUSH எனப்படுவது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மாற்று மருத்துவ முறை. அல்லோபதி மருத்துவ முறையில் நம்பிக்கையில்லாதவர்கள் இதனை பின்பற்றுகிறார்கள். தெருவுக்கு தெரு உள்ள +2 கூட படிக்காத, ஆபத்தான போலி மருத்துவர்களின் கொட்டத்தை அடக்க , படித்த AYUSH மருத்துவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

# "பெண்களுக்கு தனியாக வங்கிகள் துவக்கப்படும்''னு அறிவிச்ச உடனே எதிர்கட்சி தலைவி உட்பட , நாடாளுமன்றத்தில் இருந்த அத்தனை பெண்கள் முகத்திலும் சந்தோஷம்.
" வங்கி துவங்குறதெல்லாம் சரி சார். முதல்ல , இருக்குற வங்கிகள்ல , பெண்களுக்கு தனியா கழிப்பறை கட்டுங்க"னு யாருமே கோரிக்கை வைக்கவில்லையே.

# "நிர்பாயா திட்டம் "- டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் பெண்களின் பாதுகாப்பிற்காக 1000 கோடி செலவில் "நிர்பாய திட்டம் " துவங்கப்படுகிறது. இத்திட்டத்தை பற்றி வேறெதுவும் தகவல் கிடைக்கவில்லை.

# குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்துக்கு ரூ.15, 000 கோடி ; மதிய உணவு திட்டத்திற்கு ரூ.13,250 கோடி; மனநலம், காச நோய் , தொழு நோய் போன்றவற்றிக்கு 2,375 கோடி ஒதுக்கப்பள்ளாது . ஆனால் இவற்றை பற்றி மேற்கொண்டு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

# எந்த மருத்திற்கும் இந்தாண்டு புதிதாக வரிவிலக்கு கொடுக்கப்படவில்லை.
# பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'infrastructure status' சுகாதாரத்துறைக்கு கொடுக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறை சம்பந்தமாக எனக்கு கிடைத்த தகவல்களை கொடுத்துவிட்டேன்.http://www.youtube.com/watch?v=aRqx-MS2ZdE

சரி, சுகாதாரத்துறைய பொறுத்தவரை இந்த பட்ஜெட் எப்படி ?
புதுசா சொல்லிக்கொள்ளும் படி ஏதும் இல்லை தான்.
ஆனால் நிதி பற்றாக்குறையான இந்த சமயத்தில், நடுத்தர குடும்பத் தலைவன் தன் வீட்டிற்க்கு போடும் பட்ஜெட்டை போன்றே, சாமர்த்தியமாக பட்ஜெ
ட் போட்டுள்ளார் நமது நிதியமைச்சர்.

"வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வர வேண்டும்'' என்று அண்மையில் சொல்லப்பட்டது.
திரு ப.சிதம்பரம் அவர்களுக்கு அந்த திறமை இருக்கிறது. ஆனால் வாய்ப்பில்லை.
அவர் சார்ந்த கட்சி அடையாளத்தை தவிர்த்து பார்த்தால் , நிதியமைச்சருக்கு நான் சொல்லிக்கொள்வது: "சபாஷ் சார்".

அன்புடன் பாலாஜி.

(நான் health economics துறையில் expert கிடையாது. வளரும் மாணவன். பட்ஜெட் குறித்து நான் எழுதியதில் தவறு இருந்தால் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)

மகளிர் தின வாழ்த்து

"நேரமாயிடுச்சு.சீக்கிரம் போய் சாப்பிடுங்க.அப்புறம் வேலை செய்யலாம்."
"ம்ம்ம்.சரி.போறேன்" 

"சாப்பிட்டா தான் உங்களோட பேசுவேன்"
"சாப்பிட்டுட்டேன்னு ஃபோன்ல பொய் சொன்னா ? உன்னால கண்டுபிடிக்க முடியாதே"

"நீங்க என்கிட்ட பொய் சொல்ல மாட்டீங்க."
"பொய் சொன்னா? "

"பொய் சொன்னா சாமி கண்ண குத்திடும்"
"எனக்கு கண்ணு தெரியாம போயிடுமா?"

"ஐய்யோ இல்லீங்க.கண்ணு குத்திடும்னா..குத்திடும்னா..கெடுதல் வரும்னு அர்த்தம்"
"ஓ... அப்ப எனக்கு கெடுதல் வருமா? என்ன கெடுதல் வரும் ?"

"கெடுதல்னா கெடுதல் இல்லீங்க. லேசா..லேசான கஷ்டம்..இல்ல..அதுவும் உங்களுக்கு வராது...பேசாம முதல்ல போய் சாப்பிடுங்க."

# இப்படி 300 கோடி பேர் இருக்கிறார்கள். மீதியுள்ள 300 கோடி பேரை இயக்குகிறார்கள். ஆனால் இவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை...முயற்சிக்கிறேன்.

மகளிர் தின வாழ்த்துகள்.

நகைச்சுவை-முதலாமாண்டு எம்பிபிஎஸ்

முதலாமாண்டு எம்பிபிஎஸ் இறுதி தேர்வு. 
அனாடமி ப்ராக்டிகல். 
எக்ஸ்டர்னல் மற்றும் இண்டர்னல் மருத்துவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். 
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக வைவா.
"என்ன கேள்வி கேட்பார்களோ ?"னு அனைவருக்கும் படபடப்பு.

ஒரு மாணவன் உள்ளே நுழைகிறார்.
கை எலும்புகள்,கால் எலும்புகள் என மேஜை முழுதும் எலும்புகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

எக்ஸ்டர்னல் (தன் கையை நீட்டி) : ஏதாவது ஒன்றை எடு.

சந்தோஷமான மாணவர் ,'தேங்க்யூ'னு சொல்லிவிட்டு ,சற்றும் தாமதிக்காமல் , அங்கிருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பிரித்து, சாப்பிட ஆரம்பிக்கிறார்.
எக்ஸ்டர்னலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அதிர்ச்சியான இண்டர்னல் , கோவத்த வெளிக்காட்டிக்காம "தண்ணி வேணுமா?" னு கேட்க, 'வேண்டாம்'னு தலையசைத்தார் மாணவர்.

அன்று எலும்பை எடுக்காமல், பிஸ்கட்டை எடுத்த மாணவர், இன்று மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் சின்ஸியர் ஆசிரியர்.

நகைச்சுவை- opd

மகப்பேறு opd, ஹரியானா.
***********************
நான் (கர்ப்பவதியை பரிசோதிச்சுட்டு) : குழந்தயோட இதய துடிப்பு சரியா இருக்கு.
கர்ப்பவதி : ஆனா அடிக்கடி வயிறு வலிக்குது டாக்டர் .

நான் : எங்கமா வலிக்குது ?
அந்த பெண் வயிற்றில் ஒரு பகுதியில் கை வைத்து காட்டுகிறார். 

நான் (சிரிப்ப அடக்கிகிட்டே) : ஏம்மா, என் வயித்துல கை வெச்சு காட்டாதீங்க. உங்க வயித்துல கை வெச்சு காட்டுங்க.

சுகாதாரம் - உப்பு

சுகாதாரம்- தெரிந்து கொள்வோம்
*******************************
"அயோடின் சேர்க்கப்படாத உப்பு , மனித பயன்பாட்டிற்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம்" 

"No person shall sell or offer or expose for sale or have in his premises for
the purpose of sale, the common salt, for direct human consumption unless the same is iodised"- Food Safety and Standards (Packaging and Labelling) regulations, 2011.